இளமை பருவத்திற்கு திரும்பிய தனுஷ், சிம்பு
4 மார்கழி 2024 புதன் 14:53 | பார்வைகள் : 191
தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் தற்போது இளமை பருவத்திற்கு திரும்பியதை போல கெட்டப்பில் உள்ளனர். இது குறித்த வீடியோக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு, நயன்தாராவுக்கு டேக் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் தற்போது நடித்து வரும்’ இட்லி கடை’ படத்திற்காக இளமை தோற்றத்துக்கு திரும்பியுள்ளார். மீசை இல்லாமல், டீன் ஏஜ் இளைஞனைப் போல் இருக்கும் அவருடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல், சிம்புவும் தனது அடுத்த படத்துக்காக இளமை தோற்றத்துக்கு திரும்பியுள்ளார்.
தனுஷ், சிம்புவின் இளமை தோற்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் 40 வயதைத் தாண்டிய நிலையில், இப்போது கூட டீன் ஏஜ் இளைஞர்களைப் போல உள்ளனர் என கமெண்ட் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள், அதை நயன்தாராவுக்கு டேக் செய்து, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வரை பகிரவும் என கமெண்ட் அளித்து வருகின்றனர். அதே நேரத்தில், நயன்தாரா ரசிகர்கள் இந்த வீடியோக்களுக்கு பதிலடி கமெண்ட்ஸ் பதிவு செய்து வருவதால், சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.