திருமணத்தை மீறிய உறவை தேர்வு செய்ய காரணம் என்ன..?
4 மார்கழி 2024 புதன் 15:18 | பார்வைகள் : 137
அன்றாடம் நடக்கும் பல பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது திருமணத்திற்கு உறவு மீறிய தொடர்பே காரணம்.
ஒவ்வொரு பிணைப்பிற்கும் ஆத்மார்த்தமான நம்பிக்கையே அடித்தளம். ஆனால் இந்த தொடர்பு காரணமாக மனைவி பாதிக்கப்படுவது, கணவன் பாதிக்கப்படுவது, குறிப்பாக பிள்ளைகள் பாதிக்கப்படுவது அதிகமாகிறது.
கள்ளதொடர்பு விவகாரம் ஏதோ பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமண பந்தங்களில் மட்டும் நடப்பதில்லை. உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்விலும் இது நடப்பது தான் வேதனையிலும் வேதனை. ஒருவர் திருமண பந்தத்திற்குள் தனது பார்ட்னருக்கு உண்மையாக இருக்க வேண்டும், ஆனால், மக்கள் ஏன் திருமணத்திற்குப் புறம்பான உறவுக்குள் நுழைகிறார்கள் என்பது பற்றி எப்போதாவது தான் விவாதிக்கப்படுகிறது.
இதன் பின்னணியில் உள்ள மூல காரணத்தை முதலில் அறிந்து கொள்வது அவசியம். ஒரு நபர் தனது வாழ்க்கை துணையை ஏமாற்ற ஏன் நினைகிறார் என்பதற்கான பொதுவான சில காரணங்களை பார்ப்போம்.20 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டவர்கள் சில ஆண்டுகள் சென்ற பின் தங்களது இளவயது வாழ்க்கையை என்ஜாய் செய்யவில்லையோ என்று இளம்தலைமுறையினரை பார்த்து ஏங்குவார்கள்.
எப்படியாவது வாழ்க்கையை என்ஜாய் செய்ய விடும் என்ற எண்ணத்தில், குடும்பத்தை பற்றியும் யோசிக்காமல் திருமணத்திற்கு மீறிய பந்தத்தை நாடி டேட்டிங் செய்கிறார்கள். இது அவர்களுக்கு உற்சாகம் தருவதால் தவறு என்று நினைக்க மாட்டார்கள்.தங்கள் துணை தவறான தொடர்பில் இருப்பதை கண்டறியும் சிலர் அவர்களை திருத்தியோ அல்லது அவர்களை விட்டு விலகியோ வாழ முயற்சிக்காமல் தங்கள் துணையை பழிவாங்குவதாக எண்ணி ஒரு புதிய உறவை நாடி செல்கிறார்கள். இதனால் குடும்பம் சீர்குலைகிறது.
சிலர் தங்களது திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டால் துணையுடனோ அல்லது பெரியவர்களிடமோ பேசி பிரச்சனையை தீர்க்க பார்ப்பத்தில்லை. மாறாக வெளியே ஆறுதல் தேடுகிறார்கள். இதனாலேயே பெரும்பாலான தவறான தொடர்புகள் ஏற்படுகிறது.அதே சமயம் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருமே தங்களுக்கு வயதாகும் போது அல்லது உருவத்தில் சில மாற்றங்கள் ஏற்படும் போது தங்களுக்கு இன்னும் பிறரை கவர்ந்து இழுக்கும் வசீகரம் இருக்கிறது என்பதை நிரூபிக்கவும் இது போன்ற உறவில் ஈடுபடுகிறார்கள்.
ஒழுக்கக்கேடு மிக்க திருமணமானவர்களை பார்க்கும் சிலர் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருப்பது இந்த காலத்தில் சகஜமானது போல. அப்படி இல்லாவிட்டால் நம்மை ஒருமாதிரியாக பார்ப்பார்கள் என்று நினைக்கும் சிலர் பாதைமாறி சென்று துணைக்கு துரோகம் செய்கிறார்கள்.முன்பெல்லாம் பெண்கள் மீது தான் இந்த குற்றசாட்டு வரும். ஆனால் பணத்தேவை அல்லது அதிகார தேவைக்காக திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபடுவது இருபாலருக்கும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது.