Paristamil Navigation Paristamil advert login

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..

4 மார்கழி 2024 புதன் 15:27 | பார்வைகள் : 162


குளிர் சீசன் நெருங்கி வரும் நேரத்தில் நம்முடைய ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதை உறுதி செய்ய, நம்முடைய நோயெதிர்ப்பு அமைப்பு வலுவாக இருக்க வேண்டும் மற்றும் எப்போதும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும்.
advertisement

02

5 Best Immune Boosting Foods, According to Nutrition Expert - Hollywood Presbyterian Medical Center
நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் நாள் முழுவதும் நமக்கு தேவையான ஆற்றலை பெற நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியமாகும். நாம் இங்கே பார்க்கப் போகும் உணவுகளின் பட்டியல் உங்களுக்கு உடனடி ஆற்றலை அளிப்பதோடு, உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதன் மூலம் நோய்கள் மற்றும் தொற்றுகள் நெருங்காமல் உங்களை பாதுகாப்பாக உணர வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடனடி ஆற்றலை தரும் 10 உணவுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்..

நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு எதிரான போராட்டத்தில் நமக்கு உதவியாக இருக்கும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்வதன் மூலம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை நாம் வலுவாக வைத்து கொள்ளலாம். இதற்கான ஒரு முக்கிய மூலப்பொருளாக இருக்கும் வைட்டமின் சி-யானது சிட்ரஸ் பழங்களில் ஏராளமாக உள்ளது. தவிர வைட்டமின் சி ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

இயற்கையாகவே இனிப்பு மற்றும் ஹைட்ரேடிங் தன்மை கொண்டவையாக சிட்ரஸ் பழங்கள் இருப்பதால், அவற்றை உங்கள் குளிர்கால டயட்டில் சேர்ப்பது உங்களுக்கு விரைவான ஆற்றலை அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் தயாரிக்க ஒரு கிளாஸ் ஃபிரெஷ்ஷான ஆரஞ்சு ஜூஸை குடித்து உங்கள் நாளைத் தொடங்குங்கள் அல்லது தண்ணீரில் எலுமிச்சையை பிழிந்து குடிக்கலாம்.

 பாரம்பரிய மருத்துவத்தில் இஞ்சியானது நீண்ட காலமாக அழற்சி எதிர்ப்புப் பண்புகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சி நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைக்க உதவுவதோடு, அழற்சியை குறைக்கிறது. தவிர ரத்த ஓட்டத்தை மேம்படுத்த, செரிமானத்தை எளிதாக வைக்க மற்றும் இயற்கையாக ஆற்றலை அதிகரிக்க என பல வழிகளில் இஞ்சி நமக்கு உதவியாக இருக்கிறது. மேலும் நீங்கள் சோர்வாக உணரும்போது அதிலிருந்து குணமாகவும், சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளைத் தடுக்கவும் இஞ்சி உதவும். இஞ்சியை டீ-யாக தயாரித்து குடிக்கலாம் அல்லது ஸ்மூத்திகளில் ஃபிரெஷ்ஷான இஞ்சியை சேர்க்கலாம்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த உணவுகளில் ஒன்று பூண்டு. ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் கொண்ட அல்லிசின் என்ற கந்தக கலவை பூண்டில் உள்ளது. பூண்டு ஜலதோஷத்தின் தீவிரத்தை குறைக்கவும் மற்றும் தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவும். தவிர ரத்த ஓட்டத்தை பூண்டு ஊக்குவிக்கிறது, இது நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது. சூப்ஸ் மற்றும் வறுத்த காய்கறிகளில் பச்சை அல்லது வேக வைத்த பூண்டுகளை சேர்க்கலாம்.

 கீரையில் காணப்படும் வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைக்க உதவுகிறது. தவிர கீரைகளில் உள்ள இரும்புச்சத்து ரத்த ஓட்டத்தை சிறப்பாக வைக்கிறது, சோர்வை குறைக்கிறது மற்றும் உயிர்ச்சக்தியை அதிகரிக்கிறது. அதேபோல கீரைகளில் காணப்படும் ஃபோலேட்டின் குளிர் சீசன்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஃபிரெஷ்ஷான கீரையை பூண்டுடன் சேர்த்து வதக்கி சாப்பிடலாம் அல்லது சாலட்கள், ஸ்மூத்திகளில் சேர்த்து கொள்ளலாம்.

 குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் "நல்ல" பாக்டீரியாக்களை ஊக்குவிக்கும் ப்ரோபயாடிக்ஸ் யோகர்ட்டில் காணப்படுகின்றன. நம்முடைய நோயெதிர்ப்பு உயிரணுக்களில் (immune cells) கணிசமான சதவீதம் செரிமான மண்டலத்தில் காணப்படுவதால், ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்கு குடல் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். ஆபத்தான தொற்றுகளுக்கு எதிராக உடலின் பாதுகாப்பை ப்ரோபயாடிக்ஸ் பலப்படுத்துகின்றன. மேலும் யோகர்ட்டில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் உள்ளது. இது ஒரு நிலையான ஆற்றலை அளிக்கிறது. தேன் மற்றும் பாதாம் சேர்த்து ஒரு பவுல் யோகர்ட் எடுத்துக் கொள்ளலாம்.

நம்முடைய நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு அவசியமான கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமினான, வைட்டமின் ஈ பாதாமில் ஏராளமாக உள்ளது. வைட்டமின் ஈ-ஆனது ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்டாக நம்முடைய செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் தொற்றுகளுக்கு எதிராக உடலை பாதுகாக்க உதவுகிறது. புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த பாதாமை சாப்பிடுவது நீடித்த ஆற்றலை வழங்குவதோடு, முழுமை உணர்வை தருகிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் குறிப்பாக வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்ட்ஸ், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் அழற்சி/வீக்கத்தை குறைக்கும். இது பெர்ரிக்களில் ஏராளமாக உள்ளது. பெர்ரிக்களில் காணப்படும் இயற்கை சர்க்கரைகள் நமக்கு விரைவாக ஆற்றலை பெற உதவுகின்றன. இவற்றில் இருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் நாள் முழுவதும் ஆற்றலை பெறலாம். பெர்ரிக்களை ஸ்னாக்காக சாப்பிடலாம் அல்லது ஓட்ஸ் அல்லது ஸ்மூத்திக்களில் கலக்கலாம்.

மஞ்சளில் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற குணங்களை கொண்ட கலவையான குர்குமின் காணப்படுகிறது. இது நோய்களுக்கு எதிராக உடலின் பாதுகாப்பை வலுப்படுத்த உதவுகிறது. தவிர இது கல்லீரலில் இருந்து நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது வழக்கமான அடிப்படையில் மஞ்சளை எடுத்துக் கொள்வதால் உயிர்ச்சக்தி அதிகரிக்கும் மற்றும் சோர்வு குறையும். ஸ்மூத்திஸ், சூப்ஸ் மற்றும் கறிகளில் மஞ்சளை சேர்க்கவும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்குகளில் நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு அவசியமான பீட்டா கரோட்டின் ஏராளமாக உள்ளது. கூடுதலாக இந்த கிழங்குகள் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ்களைக் கொண்டுள்ளன. அவை நிலையான மற்றும் நீடித்த ஆற்றலை வழங்குகின்றன. இந்த கிழங்கில் நார்ச்சத்து அதிகம், இதனால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் ஆற்றல் சீக்கிரம் குறைவதை தவிர்க்க உதவுகிறது. இந்த கிழங்கை வேக வைத்தோ அல்லது ரோஸ்ட் செய்தோ சாப்பிடலாம்.

கிரீன் டீ -யானது அதன் ஆன்டிஆக்ஸிடன்ட் குணங்களுக்காக நன்கு பிரபலமாக உள்ளது. குறிப்பாக இதில் அதிகம் இருக்கும் கேட்டசின் நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் மற்றும் நோய்களைத் தடுக்கும். தவிர கிரீன் டீயிலிருக்கும் காஃபின் சிறிய ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது. இது கவனம் மற்றும் மன விழிப்புணர்வை மேம்படுத்துகிறது. தவிர இதில் இருக்கும் L-theanine என்ற அமினோ ஆசிட் நம்மை ரிலாக்ஸாக இருக்க ஊக்குவிக்கிறது. நீண்ட நேரம் ஆற்றல் பெற மற்றும் நோய்களை எதிர்க்க காலையில் ஒரு கப் கிரீன் டீ அல்லது மதியம் குடிக்கலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்