Paristamil Navigation Paristamil advert login

பரபரப்பான இறுதி நிமிடம்... கவிழ்க்கப்படும் அரசாங்கம்!!

பரபரப்பான இறுதி நிமிடம்... கவிழ்க்கப்படும் அரசாங்கம்!!

4 மார்கழி 2024 புதன் 15:51 | பார்வைகள் : 2142


ஐந்தாம் குடியரசின் மிக குறுகியகால பிரதமராக மாறுவாரா Michel Barnier??

பாராளுமன்றம் கூடியுள்ளது. மாலை 4.30 மணிக்கு வாக்கெடுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன. அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத இறுதிநிமிட மாற்றம் ஒன்று இடம்பெறாத பட்சத்தில் இரவு 8 மணிக்கு Michel Barnier இன் பிரதமர் பதவி பறிபோகும்.


Nouveau Front populaire மற்றும் Rassemblement national கட்சிகள் இரண்டு வெவ்வேறு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன் மொழிந்துள்ளன. அரசாங்கத்தை கவிழ்க்க தேவையானது 289 வாக்குகள். ஆனால் வலது மற்றும் இடதுசாரிகள் என மொத்தம் 332 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எனவே எவ்வாறாயினும் அரசு கவிழ்க்கப்படுவது இப்போதைக்கு உறுதியாகியுள்ளது.

ஜனாதிபதி மக்ரோன் புதிய பிரதமரை தேடும் முயற்சியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால் 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினை நிறைவேற்றுவதில் பெரும் பின்னடைவு ஏற்படும். இதனால் அடுத்த ஆண்டு நிர்வாக ரீதியிலான பெரும் சிக்கல்கள் எழும் ஆபத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்