பிரான்ஸ் இலவசம்!!
21 மார்கழி 2018 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18482
பிரான்சுக்குள் பல இடங்களை நீங்கள் இலவசமாக பார்வையிடலாம்... அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள், பூங்காக்கள் என இந்த பட்டியலில் உள்ள இடங்கள் மிக அதிகம்..!!
ஆனால் இன்றைய பிரெஞ்சு புதினம் அது குறித்தல்ல...!!
'பிரான்ஸ்' எனும் பெயர் எப்படி வந்தது தெரியுமா?
Franks (பிராங்க்ஸ்) எனும் பழங்குடியினர் பண்டைய ஜெர்மனியில் வசித்தனர். எப்போதென்றால் 3 ஆம் நூற்றாண்டில்.
வேட்டையாடுவதும், காடுகளை பிரித்து கூட்டம் கூட்டமாக வாழுவதும் அவர்களின் வாழ்வு முறை.
அவர்கள் பேசிய மொழி Frankish ! தமிழ் போன்று இதுவும் ஒரு பழையான தொன்மையான மொழி. மேற்கு ஜெர்மனிய பழங்குடியினர் இந்த மொழியை பேசிக்கொண்டிருந்தனர்.
இந்த மொழியில் இருந்து உருவான வார்த்தை தான் France!!
Frank எனும் வார்த்தை மருவி பிரான்ஸ் என மாறியது.
பிரான்சில் வசித்த மக்களை Frank மக்கள் என அவர்கள் சித்தரித்தார்கள். காரணம் அவர்கள் அவர்கள் அப்பகுதியை இலவசமாக எடுத்துக்கொண்டனராம். (இது ஒரு பெருங்கதை... சாவகாசமாக பார்க்கலாம்..)
இதனாலேயே பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் 3 ஆம் நூற்றாண்டில் இருந்தே 'ஆவாது'.
சரி தொலைகிறது... சொல்ல மறந்துவிட்டோம்... பிரான்சை Frank என அழைத்தார்கள் இல்லையா?? Frank என்றால் 'இலவசம்' என அர்த்தம்!!