இண்டியா கூட்டணி போராட்டம்; புறக்கணித்தது சமாஜ்வாதி!
5 மார்கழி 2024 வியாழன் 07:47 | பார்வைகள் : 510
பார்லிமென்ட் வளாகத்தில், இன்றும் (டிச.,05) இண்டியா கூட்டணிக் கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கி முதல் நாளில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (டிச.,03) காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. லோக்சபாவில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா அமைதி காக்கும் படி, பலமுறை எச்சரித்தார்.
எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் துளி அளவும் கூட கண்டுகொள்ளாமல், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து ஓம் பிர்லா உத்தரவிட்டார். அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, ராஜ்யசபா மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, பார்லிமென்ட் வளாகத்தில், காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர். அதானி விவகாரத்தில் பார்லி., கூட்டுக்குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில், சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் பங்கேற்கவில்லை.
ராகுல் பேட்டி
நிருபர்கள் சந்திப்பில், ராகுல் கூறியதாவது: பிரதமர் மோடியும், தொழிலதிபர் அதானியும் இரு வேறு நபர்கள் அல்ல; ஒன்று தான். அதானியை பிரதமர் மோடி விசாரணைக்கு உட்படுத்த மாட்டார். அதானியை விசாரணைக்கு உட்படுத்துவது மோடி தன்னைத் தானே விசாரிப்பதை போன்றது, என்றார்.