இல்-து-பிரான்சுக்குள் அழகிகளே இல்லையா??!
20 மார்கழி 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 18571
அறிவியலையும் ஆச்சரியத்தையும் தரும் பிரெஞ்சு புதினத்தில், அழகிகள் பற்றி தெரிந்துகொள்ள என்ன தான் உள்ளது? அட... இதுவும் ஒரு பொதறிவு தான்...
உலக அழகி பட்டம் போன்று உள்நாட்டு அழகி போட்டியும் அதாவது Miss.France போட்டியும் வருடா வருடம் இடம்பெற்று வருவது வாசகர்கள் அறிந்ததே.
சிக்கல் என்னவென்றால் இந்த அழகிகள் அனைவரும் இல்-து-பிரான்சுக்கு வெளியே இருந்து தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஏன் இல்-து-பிரான்சுக்குள் அழகிகளே இல்லையா??!!
1929 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 15 தடவைகள் Miss.Paris அல்லது Miss.Ile-de-France அழகிகள் பிரெஞ்சு அழகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதெல்லாம் 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் தான்.
அதிலும் குறிப்பாக 1930 - 1950 ஆம் ஆண்டுக்குள் தெரிவானவர்கள் தான் அதிகம்.
கடந்த 24 வருடங்களாக பிரான்சின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து அழகிகள் வருடா வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்தவருடம் (2017) மிஸ்.இல்-து-பிரான்ஸ் அழகி Lison Di Martino, மிஸ்.பிரான்ஸ் போட்டில் கலந்துகொண்டு இறுதிச்சுற்றுக்கு தெரிவானார்.
இம்முறை 'தட்டுறோம் தூக்குறோம்!' என நினைத்திருந்தபோது அவர் இரண்டாம் இடத்தை பெற்று கனவில் கருங்கல்லை தூக்கி போட்டார்!!
சரி தொலைகிறது 2018, இவ்வருடம் இல்-து-பிரான்சுக்குள் இருந்து அழகி வருவார் என நினைத்திருந்தோம். ஆனால் Vaimalama Chaves எனும் Tahiti நகர அழகி தான் இம்முறை Miss.France!!
அட என்னப்பா, இல்-து-பிரான்சுக்குள் 12 மில்லியன் பேர் இருக்குறீங்களே... ஒரு அழகி கூடவா இல்லை??!!