இயக்குனர் கே. எஸ். ரவிக்குமாரின் தாயார் மரணம்!
5 மார்கழி 2024 வியாழன் 09:08 | பார்வைகள் : 456
புரியாத புதிர் என்ற படத்தில் இயக்குனரான கே. எஸ் .ரவிக்குமார், அதன்பிறகு சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, படையப்பா, தசாவதாரம் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். சமீப காலமாக படங்கள் தயாரிப்பதோடு பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கே.எஸ்.ரவிக்குமாரின் தாயார் ருக்குமணி அம்மாள் வயது மூப்பு காரணமாக சென்னையில் மரணம் அடைந்துள்ளார். இன்று மதியம் 2:30 மணிக்கு இறுதி சடங்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் திரையுலகினர் பலரும் கே .எஸ்.ரவிக்குமாரை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறி தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.