மலர் வீதி! - பரிசுக்குள் ஒரு ஆச்சரிய வீதி!!
19 மார்கழி 2018 புதன் 10:30 | பார்வைகள் : 18398
பரிஸ் ஏழாம் வட்டாரத்தில் உள்ள ஒரு வீதியின் பெயர் 'மலர்'!! அட... என ஆச்சரியப்படாமல் தொடர்ந்து படியுங்க...
<<Rue Malar>> என ஒரு வீதி பரிஸ் ஏழாம் வட்டாரத்தில் உள்ளது. ஆனால் அதை மலர் என உச்சரிப்பதில்லை என்பது வேறு விடயம். ஆனால் இந்த பெயரைத் தாண்டி மேலும் பல விடயங்கள் இந்த வீதி குறித்து அறிந்துகொள்ள வேண்டும்!!
ஏழாம் வட்டாரத்தில் உள்ள Gros Caillou பகுதியில் உள்ளது இந்த வீதி.
71, Quai d'Orsay இல் ஆரம்பிக்கும் இந்த வீதி 88-88 bis, rue Saint-Dominique வரை நீடிக்கிறது.
15 மீட்டர்கள் அகலமும், 313 மீட்டர் நீளமும் கொண்டது.
சரி, யார் இந்த மலர்?!
பரிசை நிர்மான பணியின் போது, வீதிகள் அமைக்கும் பணிக்காக பல நில உரிமையாளர்களிடம், தங்களது நிலத்தின் ஒரு பகுதியை விட்டுத்தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. சின்ன சின்ன வீதிகளுக்காக பொதுமக்கள் தங்கள் நிலத்தில் இருந்து ஒரு பகுதியை விட்டுக்கொடுத்தனர்.
அப்படி பரிசுக்குள் 500 வரையானவர்கள் இடங்களை விட்டுக்கொடுத்தனர். அரசு அவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில், அவர்களின் பெயர்களையே வீதிக்கு வைத்தது.
அப்படி சிக்சியது தான் இந்த Rue Malar!!
Lady Tiby என்பவரின் மனைவி Malar இன் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவர்கள் பூர்வீக பிரெஞ்சு குடிமக்கள்.
பெயரை பார்த்ததும் நீங்கள் பிரேமம் 'மலர்' டீச்சர் போன்று ஏதேனும் ப்ளாஷ்பேக் எதிர்பார்த்திருந்தால்... மன்னிக்கவும். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.!!