Paristamil Navigation Paristamil advert login

சியோமியின் சொந்த சிப்செட் உற்பத்தி முயற்சி- தொழில்நுட்ப துறையில் அடுத்த மைல்கல்!

சியோமியின் சொந்த சிப்செட் உற்பத்தி முயற்சி- தொழில்நுட்ப துறையில் அடுத்த மைல்கல்!

5 மார்கழி 2024 வியாழன் 13:57 | பார்வைகள் : 237


சீனாவின் பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட சியோமி, ஸ்மார்ட்போன் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில், தற்போது சொந்த சிப்செட்டை உற்பத்தி செய்யும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

மின்சார வாகனங்களில் முதலீடு செய்ததை அடுத்து, இந்த புதிய முயற்சி சியோமியின் தொழில்நுட்பத் துறையில் மேலும் விரிவடைய முயற்சிப்பதைக் காட்டுகிறது.

இதுவரை மீடியாடெக் மற்றும் குவால்காம் சிப்செட்களைப் பயன்படுத்தி வந்த சியோமி, தனது சொந்த சிப்செட்டை உருவாக்குவதன் மூலம், தயாரிப்புகளில் அதிக கட்டுப்பாட்டைப் பெறவும், போட்டியாளர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளவும் முயல்கிறது.

2025ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட சிப்செட்களை உற்பத்தி செய்யும் இலக்கை நிர்ணயித்துள்ள சியோமி, சீனாவின் செமிகண்டக்டர் தொழில்நுட்ப சுதந்திரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்டெல், என்விடியா, ஒப்போ போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடுவது எளிதான காரியமல்ல.

குவால்காமின் சிறந்த செயல்திறன் காரணமாக சாம்சங் போன்ற நிறுவனங்கள் கூட அதை நம்பியிருக்கின்றன.

அதே நேரம், சியோமியும் குவால்காம் உடன் நீண்ட காலமாக நல்ல உறவைப் பேணி வந்தாலும், தற்போது சொந்த சிப்செட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்