ஜனாதிபதியின் மாளிகை யாருடையது??!
18 மார்கழி 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 17908
ஜனாதிபதியின் மாளிகை எங்கு உள்ளது? அது பரிஸ் எட்டாம் வட்டாரத்தில் உள்ள Rue du Faubourg Saint-Honoré வீதியில் உள்ளது.
இந்த தகவல் உங்களுக்குத் தெரியும்... தெரியாத தகவல் ஒன்றை இன்று உங்களுக்குச் சொல்கின்றோம்.
ஜனாதிபதி வதிவிடமான Élysée Palace, பிரெஞ்சு ஜனாதிபதிகள் வசிப்பதற்காக கட்டப்பட்டதல்ல. 1848 ஆம் ஆண்டு முதல் தான் இங்கு ஜனாதிபதி அல்லது அரச சந்திப்புக்கள் இடம்பெறும் இடமாக மாறியது.
Louis Henri de La Tour d'Auvergne எனும் ஒரு பிரபு. மகா செல்வந்தர். அவருக்காக கட்டப்பட்ட கட்டிடம் தான் இந்த Élysée Palace. 1679 ஆம் ஆண்டு பிறந்த இவர் இதே மாளிகையில் 1753 ஆம் ஆண்டு இறந்தார். இவருக்கு பிள்ளைகள் யாரும் இல்லை. திருமணம் ஆனபோது இவருக்கு 32 வயது. மனைவி Pierre Crozat க்கு 12 வயது. 'சீதனம்' வாங்கித்தான் திருமணம் செய்துகொண்டார். (என்ன இங்கயுமா??!)
அதை விடுங்கள், அவர் தனக்காக கட்டிய மாளிகையைத் தான் இன்று ஜனாதிபதி மாளிகையாக மாற்றிக்கொண்டு அனைத்து ஜனாதிபதிகளும் பயன்படுத்தினார்கள்.
லூயிஸ் ஹென்ரி இறந்ததும் அவரின் அரண்மனை பூட்டப்பட்டு பாவனை அற்று இருந்தது. பிற்பாடு அரசுக்கு அரச காரியங்களை மேற்கொள்ள சோம்ப்ஸ்-எலிசேக்கு அருகிலேயே ஒரு வளாகம் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணியே, இந்த மாளிகையை தூசு தட்டினார்கள்.
Hôtel d'Évreux என இதற்கு இன்னொரு பெயர் உள்ளது நீங்கள் அறிந்தது தானே??!