காதல் ஆப்பிள் பற்றி தெரியுமா??
17 மார்கழி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 18808
'ஆப்பிள் பழம் மீது சிலருக்கு காதல் இருக்கலாம்..!' ஆனால் இந்த பதிவு அதைப்பற்றியல்ல...
பிரெஞ்சு மக்களிடையே <<காதல் அப்பிள்>> என ஒரு வார்த்தை பழக்கத்தில் உள்ளது. தக்காளிப்பழத்தைத் தான் இவர்கள் இவ்வாறு அழைக்கிறார்கள்.
தக்காளி மீது என்ன காதல் வேண்டி கிடக்கு?!! அதாவது அப்பிள் பழம் எப்படி மிக இனிமையானதோ... தக்காளி காதலுக்கு இனிமையானதாம். <<pomme d'amour>> என மிக பாசமாக தக்காளியை அழைக்கிறார்கள்.
ஏன் அப்படி அழைக்கிறார்கள்? இயற்கையாகவே தக்காளியில் பாலுணர்வைத் தூண்டும் ( Aphrodisiac powers) வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளது. 'தக்காளியில் தனித்துவம்!' என பல அறிவியலாளர்கள் இதை ஆண்களுக்கு 'பரிந்துரைக்கின்றார்கள்!'
அந்த உணர்வுதானே காதல்... காதலை தூண்டும் வேதிப்பொருட்கள் தக்காளியில் நிறைந்திருப்பதால் இதற்கு இப்படி ஒரு பெயர்!!
தக்காளியை குழம்புச் சட்டியில் வெட்டி போட்டு, வதக்கி... அதை விடுங்கள்...
காலாகாலமாக தக்காளியை சமையலுக்கு பயன்படுத்தி வருகின்ற போதும், தாவரவியலாளர்களின் கூற்றுப்படி அது பழவகையைச் சேர்ந்தது என குறிப்பிடுகின்றனர்.
அவர்கள் அதை கண்டுபிடிப்பதற்கு முன்னரே அதற்கு தக்காளிப்'பழம்' என பெயர் வைத்துள்ளார்கள் தமிழர்கள்..!!
இனிமேல் உங்களை யாரேனும் 'தக்காளி' என திட்டினால், கோவப்படாமல் பெருமைப்படுங்கள் எம் மக்காள்!!