70,000 ஆயிரம் கோடி சொத்து! 22 வயதில் ஓய்வுபெற்ற உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்..
6 மார்கழி 2024 வெள்ளி 10:45 | பார்வைகள் : 252
இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரராக இருந்த ஆர்யமான் பிர்லாவின் சொத்து மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது.
முதல் தர போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 414 ஓட்டங்கள் குவித்த வீரர் ஆர்யமான் பிர்லா.
தொடக்கத்திலேயே கவனம் ஈர்த்த இவரை ராஜஸ்தான் அணி வாங்கியது. ஆனால் பிளெயிங் 11யில் அவர் இடம்பிடிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, 2019யில் தனிப்பட்ட காரணங்களால் 22 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக ஆர்யமான் பிர்லா அறிவித்தார்.
பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் மகன்தான் இந்த ஆர்யமான் பிர்லா. இவர் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் எனும் பெயர் பெற்றார்.
இவரது சொத்து மதிப்பு ரூ.70,000 கோடி நிகர மதிப்பு என ஆகும். இது சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோஹ்லியின் சொத்து மதிப்பை விட அதிகம் ஆகும்.
கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆர்யமான் பிர்லா தற்போது தொழில்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.