இலங்கையில் வளர்ப்பு மகளை கொன்று மலசல குழியில் வீசியவர் கைது
6 மார்கழி 2024 வெள்ளி 12:45 | பார்வைகள் : 817
14 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் கம்பஹா – அக்கரவிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தனது மகள் கடந்த 02 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக அவரின் தாய் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் , வீடொன்றில் உள்ள மலசல குழியிலிருந்து சிறுமியின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.