Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் ஜனாதிபதியின் மரண தண்டனை தொடர்பில்  நிபுணர்களின் கருத்து

உக்ரைன் ஜனாதிபதியின் மரண தண்டனை தொடர்பில்  நிபுணர்களின் கருத்து

6 மார்கழி 2024 வெள்ளி 13:03 | பார்வைகள் : 1990


ரஷ்யா மீது உக்ரைன் நாடானது போர் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதியின் மரண தண்டனை ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது என கூறும் பிரித்தானிய நிபுணர் ஒருவர், உலகின் போர் அரசியல் குறித்த நடைமுறை பிரச்சினைகளை விளக்கியுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதியின் மரண தண்டனை, ஏற்கனவே கிரெம்ளினில் கையெழுத்தாகிவிட்டது என்கிறார் பக்கிங்காம் பல்கலை பேராசிரியரான அந்தோனி க்லீஸ் (Professor Anthony Glees).

உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்கு ஓடிப்போகக்கூடும் என புடின் எதிர்பார்ப்பதாகவும், ஆனால், அப்படி நடக்காது, ஜெலன்ஸ்கி எதையும் இடையில் விட்டுவிட்டு ஓடுபவர் அல்ல என தான் கருதுவதாகவும் தெரிவிக்கிறார் பேராசிரியர் அந்தோனி.

ஜெலன்ஸ்கியின் இன்றைய நிலைமைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ஜேர்மன் சேன்ஸலரான ஓலஃப் ஷோல்ஸும்தான் காரணம் என்று கூறும் பேராசிரியர் அந்தோனி, புடினை தடுத்து நிறுத்த உக்ரைனுக்குத் தேவையான உதவிகளை அவர்கள் கொடுக்கவேயில்லை என்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, உக்ரைன் மோசமான நிலைமைக்குள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கிறார் பேராசிரியர் அந்தோனி.

ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, ரஷ்யா தனக்கு வேண்டிய நிலப்பரப்பை எடுத்துக்கொள்ளலாம், ஜெலன்ஸ்கியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என ஏற்கனவே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.


இதற்கிடையில், தென்கொரிய ஜனாதிபதி ராணுவச்சட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தைக் கண்டு மேற்கத்திய நாடுகள் திகைப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கிறார் பேராசிரியர் அந்தோனி.

தென்கொரியா அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி, ரஷ்யாவுக்கு வடகொரியா தன் படைகளை அனுப்பிக்கொண்டிருக்கும் நேரத்தில், எதிரணியிலோ, உக்ரைனுடைய ஆதரவாளரான தென்கொரியா நிலையற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளது.

தென்கொரியாவின் இந்த நிலையற்ற தன்மையால் இரண்டு பேருக்கு லாபம் என்கிறார் பேராசிரியர் அந்தோனி. ஒன்று, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றொருவர் அவரது கூட்டாளியான புடின்.


மேற்கத்திய அணி, அதாவது உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா முதலான நாடுகள் கொண்ட அணி, கடந்த வாரத்தைவிட இந்த வாரம் பார்க்கும்போது வலுவிழந்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை சிதறவிட்டுவிட்டார் ஜோ பைடன், பிரான்ஸ் அரசியலில் குழப்பம், உக்ரைனுக்கு வேண்டிய ஆயுதங்கள் கிடைக்கவில்லை. ஆக மொத்தத்தில், உக்ரைனுடைய நிலைமை மோசம் என்கிறார் பேராசிரியர் அந்தோனி.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்