Paristamil Navigation Paristamil advert login

CRS படை நாசிப்படையா??!!

CRS படை நாசிப்படையா??!!

14 மார்கழி 2018 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18570


கடந்த சில நாட்களாக 'மே 1968' ஆர்ப்பாட்டத்தை பற்றி தொடர்ச்சியாக படித்து வந்தோம் இல்லையா, இன்றைய பிரெஞ்சு புதினத்தில் அந்த ஆர்ப்பாட்டத்தின் போது 'ஆர்ப்பாட்டக்காரர்களால்' உச்சரிக்கப்பட்ட சில வாசகங்கள் குறித்து பார்க்கலாம்...!! 
 
ஆர்ப்பாட்டக்காரர்களை CRS அதிகாரிகள் கண்ணீர் புகை கொண்டு அடக்கினார்கள். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் 'CRS = SS' என கோஷமிட்டனர். SS என்பது ஜெர்மனிய நாசிப்படைகளைக் குறிக்கும் வார்த்தை. அதாவது CRS படையினர் நாசிப்படைகள் போல் செயற்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தினார்கள். 
 
 
<<Il est interdit d'interdire>> - 'தடை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது'
 
<<Élections, piège à con>> - 'தேர்தல் முட்டாள் தனத்திற்கான ஒரு பொறி'
 
<<Je suis Marxiste—tendance Groucho>> 'நான் ஒரு மார்க்ஸிட். Groucho குணம் கொண்டவன்!' (Groucho - என்பவர் அமெரிக்காவின் நகைச்சுவை நடிகர்)
 
<<Cela nous concerne tous>> - 'இது நம் எல்லோருக்கும் பொருந்தும்!'
 
<<Soyez réalistes, demandez l'impossible>> -'எதார்த்தமாக இருங்கள். சாத்தியமற்றதைக் கேளுங்கள்!'
 
<<Sous les pavés, la plage>> - 'பாறைக்கற்களுக்கு கீழ் ; கடற்கரை!'
 
என பல வித கோஷங்களை இந்த ஒரு மாத ஆர்ப்பாட்டத்தில் எழுப்பியிருந்தார்கள். 
 
பரிசில் உள்ள Odéon-Théâtre de l'Europe அரங்கிற்கு முன்னால் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு 'சட்டமன்றம் முதலாளித்துவ அரங்காக மாறியதால், திரையரங்கு சட்டமன்றமாக மாறவேண்டும்!' என பதாகை ஒன்றை நிறுவியிருந்தார்கள். 
 
(முற்றும்)

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்