பிரதமரை தேடும் படலம்.. பல்வேறு சந்திப்புக்கள்!!
6 மார்கழி 2024 வெள்ளி 14:36 | பார்வைகள் : 1880
இன்று டிசம்பர் 6, வெள்ளிக்கிழமை எலிசே மாளிகையில் பல்வேறு சந்திப்புக்கள் இடம்பெற உள்ளன. நாட்டின் புதிய பிரதமரை நியமிக்கவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதால் அதற்கான பணிகளில் தீவிரம் செலுத்தியுள்ளார் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்.
இன்று காலை முதல் ஜனாதிபதி மக்ரோன் அவரது எலிசே மாளிகையில் வைத்து பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டு வருகிறார். இந்த சந்திப்பு இன்று இரவு வரை தொடரும் எனவும், வலதுசாரி கட்சித் தலைவர்கள், இடதுசாரி கட்சித் தலைவர்கள் என பல தரப்பு அரசியல் தலைவர்களையும், முன்னாள் சபாநாயர்கள் போன்றோரையும் மக்ரோன் சந்தித்து வருகின்றார்.
கம்யூனின்ஸ் கட்சியினரை தொலைபேசியில் அழைத்து உரையாடியதாகவும் அறிய முடிகிறது.