Paristamil Navigation Paristamil advert login

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமா..?

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமா..?

6 மார்கழி 2024 வெள்ளி 14:45 | பார்வைகள் : 343


கொலாஜன் நமது சருமத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும், முடியை மென்மையாகவும், வலுவாகவும் வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கொலாஜன் என்பது நம் உடலில் இருக்கும் ஒரு ப்ரோடீன் ஆகும்.

வயதாகும்போது, ​​நம் உடலில் கொலாஜன் உற்பத்தி குறைகிறது. இதன் காரணமாக, தோலில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் உருவாகின்றன. கொலாஜன் உற்பத்தி குறைந்தால், முடி வலுவிழந்துவிடும். நம் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க, முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, கொலாஜன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கொலாஜன் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொண்டால், இந்த ப்ரோடீனின் உற்பத்தியை மேம்படுத்தலாம்.

கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க வைட்டமின் ‘சி’ நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது எளிதான மற்றும் சிறந்த வழியாகும். கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க மாத்திரைகள் மற்றும் பவுடர்கள் உள்ளிட்ட பல சப்ளிமென்ட்ஸ்களை எடுத்துக் கொள்வதைவிட ஆரோக்கியமான உணவு மூலம் அதைப் பெறுவதுதான் சிறந்த வழி. மேலும், உங்கள் உணவில் வைட்டமின் ‘சி’ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் எளிதானது. இது உங்கள் சருமத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதற்கும், சுருக்கங்கள், கோடுகள் போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்கும் வைட்டமின் ‘சி’ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் சி-ஐ அதிகமாக எடுத்துக் கொள்வது வயிறு மற்றும் குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

வைட்டமின் ‘சி’ ஆனது கொலாஜன் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கொலாஜனானது சருமத்தை பராமரிக்கும் ப்ரோடீன் ஆகும். எனவே கொலாஜன் உற்பத்தியை தூண்டுவதன் மூலம், சருமத்தில் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைத்து, உங்கள் சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

வைட்டமின் C என்ற அத்தியாவசிய ஆன்டிஆக்சிடன்ட் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படக்கூடிய சேதத்தில் இருந்து நமது செல்களை பாதுகாக்கிறது. இது உங்கள் சருமத்தை முன்கூட்டியே ஏற்படும் வயதான தோற்றத்தை பாதுகாக்க உதவுகிறது.

வைட்டமின் ’சி’ ஆனது மெலனின் உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனை குணப்படுத்த உதவுகிறது. வைட்டமின் சி-ஐ எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் தோல் இயற்கையாகவே பிரகாசிப்பதோடு மட்டுமின்றி சருமத்தின் நிறத்தை அதிகரிக்கிறது.

சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாத்துக் கொள்ள சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு பதிலாக, வைட்டமின் ‘சி’ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் அல்ட்ரா வயலட் ரேஸ்க்கு எதிராக உங்கள் சருமத்திற்கு இயற்கையான பாதுகாப்பை வழங்குகிறது. இது சூரிய ஒளியால் ஏற்படும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்-ஐ குறைக்கிறது.

வைட்டமின் ‘சி’ ஆனது உங்கள் சருமத்தை இயற்கையாக பழுதுபார்க்கும் செயல்முறைகளை ஆதரிக்கிறது. இது முகப்பரு வடுக்கள், சிறிய வெட்டுக்கள் மற்றும் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்