மே 1968! - என்ன நடந்தது??
13 மார்கழி 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 18398
ஜூன் மாதம் பிறக்கும் போது, நாடு மிக அமைதியாக இருந்தது. மாணவர்கள் பாடசாலைக்குத் திரும்பியதும், ஊழியர்களும் பணிக்குத் திரும்பினர்.
அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப் பட்டிருந்தது. ஜூன் 16 ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசு மிக பரபரப்பாக செயற்பட்டது. என்னதான் நடக்குமோ என மக்களிடையே பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
தேர்தல் நாளும் வந்தது.
ஜூன் 16 ஆம் திகதி தேர்தல் மிக அமைதியாக இடம்பெற்றது.
ஜனாதிபதி சாள்-து-கோலின் கட்சி வரலாற்றில் இல்லாத அளவு அபார வெற்றி பெற்றது. 486 தொகுதிகளில் 353 தொகுதிகளை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
ஏனைய கட்சிகள் அனைத்தும் ஸ்தம்பித்து போயின. இந்த முடிவு பலருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
அத்தோடு, அனைத்து ஆர்ப்பாட்டக்களும் கைவிடப்பட்டிருந்தன. நாடு முற்றாக அமைதிக்குத் திரும்பியது.
'ஒரு சில எண்ணிக்கையைக் கொண்ட நபர்களால் ஒரு ஆட்சியைக் கலைக்க முடியாது. அது ஜனநாயகமும் ஆகாது. அதேபோல் வன்முறையை கட்டவிழ்த்து, போராட்டத்தில் குதித்து எந்த நிறைவேற்று அதிகாரத்தையும் அடைய முடியாது!' என இந்த <<மே 1968>> நிகழ்வு மிக திடமான ஒரு முடிவை மக்கள் மத்தியில் விதைத்தது!!
இந்த தொடர் இத்தோடு முடிவுக்கு வருகின்றபோதும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பல அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்... அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கோஷங்களை எழுப்பியிருந்தனர். அது தொடர்பாக தகவல்களை நாளைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்...!!