நோர்து-டேம் : உக்ரேனிய ஜனாதிபதி வருகை!! - சில இறுதி நிமிட செய்திகள்!!
7 மார்கழி 2024 சனி 12:28 | பார்வைகள் : 2954
நோர்து-டேம் தேவாலயம் திறப்புவிழாவுக்கு தயாராகிறது. இன்னும் சில நிமிடங்களில் திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பிக்க உள்ளன. சற்றுமுன்னர் உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky பரிசுக்கு வருகை தந்துள்ளார்.
இன்று காலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வருகை தந்தார். அவரை ஜனாதிபதி மக்ரோன் வரவேற்றார். மூன்று ஜனாதிபதிகளுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெறுமா என்பது தொடர்பில் எலிசே மாளிகை தகவல் வெளியிடவில்லை.
பிரித்தானியா சார்பாக இளவரசர் வில்லியம் கலந்துகொள்கிறார். அவர் பரிசுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி (இம்மாதம் 20 ஆம் திகதி பொறுப்பேற்க உள்ள) டொனால்ட் ட்ரம்பினை சந்திக்க உள்ளார்.
****
நோர்து-டேம் திறப்பு விழா ஆரம்பித்ததில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. ஜூன் 8, 2025 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு நாளும் இடம்பெற உள்ளதாக நோர்து-டேம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.