Paristamil Navigation Paristamil advert login

மே 1968! - என்ன நடந்தது??

மே 1968! - என்ன நடந்தது??

12 மார்கழி 2018 புதன் 11:30 | பார்வைகள் : 18302


அமைச்சரவை சந்திப்பில் 'அமைச்சரவை கலைக்கப்பட்டால் நாடு உள்ள நிலைமையில் பெரும் ஆபத்து நேரலாம்!' என தெரிவிக்கபப்பட்டு, உடனடியாக கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. 
 
கருத்துக்கணிப்பில் அரசாங்கம் கலைக்கப்படுவதை மக்கள் விரும்பவில்லை என தெரியவந்தது. 
 
மே 30, 14:30 மணிக்கு பிரமர் Pompidou,  சாள்-து-கோலிடம் 'அமைச்சரவையை கலைத்துவிட்டு புதிய தேர்தலுக்கு அழைப்பு விட்டு, பதவியை விட்டு விலகுங்கள்!' என வற்புறுத்தினார். 
 
 
16:30 மணிக்கு சாள்-து-கோல் பதவி விலகலை நிராகரித்துவிட்டு, புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். 
 
 
"ஜூன் 23 ஆம் திகதி தேர்தல் இடம்பெறும். அனைத்து ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டுவிட்டு பணிக்குத் திரும்பவேண்டும். தேர்தல் முடியும் வரை அவசரகாலச் சட்டம் அமலில் இருக்கும்" என அறிவித்தார். 
 
அறிவிப்பைத் தொடர்ந்து, சாள்-து-கோலின் ஆதரவாளர்கள் தேசியக்கொடியை அணிந்துகொண்டு சோம்ப்ஸ்-எலிசேயில் அமைதி ஊர்வலத்தில் ஈடுபடனர். அவர்கள் சுமாராக எட்டு இலட்சம் பேர் இருந்தனர். 
 
'பரிசுக்கு வெளியே இராணுவம் சூழ்ந்துள்ளது' எனும் தகவலை ஊடகங்களிடம் கசிய விட்டார் சாள்-து-கோல். 
 
ஆப்பாட்டங்கள் அடங்கி, வன்முறைப் போராட்டம் கிட்டத்தட்ட நிறைவுக்கு வந்ததாக அப்போது உணர முடிந்திருந்தது. 
 
ஜூன் மாத தேர்தல் நாள் நெருங்கியது!!
 
(நாளை..)

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்