Paristamil Navigation Paristamil advert login

ரொனால்டோ கோல் அடித்தும் அதிர்ச்சி தோல்விaடைந்த அல் நஸர் அணி! 

ரொனால்டோ கோல் அடித்தும் அதிர்ச்சி தோல்விaடைந்த அல் நஸர் அணி! 

7 மார்கழி 2024 சனி 14:10 | பார்வைகள் : 257


அல் இத்திஹாத் அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 

சவுதி புரோ லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் அல் நஸர் மற்றும் அல் இத்திஹாத் அணிகள் மோதின.

பரபரப்பான முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கடுமையாக போராடியதால் கோல் ஏதும் விழவில்லை.

அல் இத்திஹாத் அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா (Karim Benzema) 55வது நிமிடத்தில் கோல் அடித்தார். 

ஸ்டீவன் பெர்ஃவிஜன் பாஸ் செய்த பந்தை பென்சிமா விரைந்து செயல்பட்டு வலைக்கு தள்ளினார். 

அடுத்த இரண்டு நிமிடங்களில் ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) பதிலடி கோல் அடித்தார். 

அதனைத் தொடர்ந்து இரண்டாவது கோல் அடிக்க இரு அணி வீரர்களின் முயற்சிகளும் 90 நிமிடங்கள் வரை முறியடிக்கப்பட்டன.

ஆனால், கூடுதல் நிமிடத்தில் (90+1) ஸ்டீவன் பெர்ஃவிஜன் (Steven Bergwijn) அடித்த மிரட்டலான கோல், அல் இத்திஹாத் அணியின் வெற்றி கோலாக மாறியது. 

இதன்மூலம் அல் இத்திஹாத் (Al Ittihad) அணி 2-1 என்ற கோல் கணக்கில் அல் நஸர் (Al Nasser) அணியை வீழ்த்தியது. 

தோல்வி குறித்து பதிவிட்ட ரொனால்டோ, "வலுவாக மீண்டும் திரும்பி வருவோம்" என குறிப்பிட்டார்.  
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்