வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட்

7 மார்கழி 2024 சனி 15:25 | பார்வைகள் : 4117
தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படம் 'வாடிவாசல்' என கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தனர். செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்காக ஜல்லிக்கட்டு காளை உடன் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் சூர்யா.
ஆனால் இந்த படத்தை அறிவித்த பிறகு வெற்றிமாறன் விடுதலை 1, 2 படங்களை இயக்கியுள்ளார். அதேப்போல் சூர்யா நடிப்பில் இரண்டு படங்கள் முடிந்து ஒரு படம் வெளியாகிவிட்டது. இதனால் வாடிவாசல் படம் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இந்தாண்டு துவக்கத்தில் இதன் டெஸ்ட் ஷூட் நிறைவு பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை 2025ம் ஆண்டு மாட்டு பொங்கல் அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர். மேலும், இதன் படப்பிடிப்பு 2025ல் மார்ச் அல்லது ஏப்ரலில் துவங்கும் என்கிறார்கள்.