Paristamil Navigation Paristamil advert login

மே 1968! - என்ன நடந்தது??

மே 1968! - என்ன நடந்தது??

10 மார்கழி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 21016


ஒரு மில்லியன் மக்கள் பரிசின் வீதிகளில் இறங்கியதும் அரசு கொஞ்சம் தடுமாறியே போனது. 
 
எவ்வித பேச்சுக்களும் இன்றி உடனடியாக பிரதமர்  Georges Pompidou, சிறையில் இருக்கும் மாணவர்களை விடுவித்தார். Sorbonne பல்கலைக்கழகத்தினை மீண்டும் திறக்க கட்டளையிட்டார். 
 
 
இதனால் ஆர்ப்பாட்டம் குறையும் என அரசு நம்பியது. ஆனால் நடந்தது வேறு... மாணவர்கள் மேலும் மிக மோசமாக நடந்துகொண்டனர். கல்லூரிகளை முடக்கினர். 'எதிர்காலம் சூறையாடப்படுகிறது!' என ஊடகங்கள் குற்றம் சாட்டின. ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. 
 
மானவர்களோடு பணியாளர்களும் இணைந்துகொண்டனர். மே 17 ஆம் திகதி 200,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
ஆனால், சற்றும் எதிர்பார்த்திராத ஒரு நிகழ்வு அடுத்தடுத்த வாரங்களில் இடம்பெற்றது. கிட்டத்தட்ட பத்து மில்லியன் பேர் தொடர்ச்சியாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இந்த எண்ணிக்கை நாட்டின் மொத்த பணியாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும்!! 
 
 
24 ஆம் திகதி கலவரக்காரர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் முற்பட்ட போது, லியோனில் இரண்டு நபர்கள் கொல்லப்பட்டிருந்தனர். 
 
அதே நாளில், லியோனில்,  கலவரம் அடக்க வந்த காவல்துறையினர் மீது சாரதி இல்லா கனரக வாகனம் ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுப்பினார்கள். இந்த மோசமான தாக்குதலில் Rene Lacroix எனும் காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டார். 
 
மே 26 ஆம் திகதி, பரிசில் Phillipe Metherion எனும் காவல்துறை அதிகாரி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். 
 
வன்முறைகள் கடிவாளம் அற்ற குதிரையாய் நாலா திசைகளிலும் வெடித்தது...
 
(நாளை...)

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்