பிரித்தானியாவை தாக்கிய புயல்.. பிரான்சுக்குள் நுழைந்தது... 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
8 மார்கழி 2024 ஞாயிறு 06:30 | பார்வைகள் : 2777
பிரித்தானியாவை தாக்கிய tempête Darragh புயல், இன்று பிரான்ஸ் வழியாக கடக்கிறது. பிரித்தானியவில் இருவர் பலியாக காரணமாக அமைந்த இந்த புயல் வலுவிழந்து பிரான்சை கடப்பதால், குறைந்தபட்ச எச்சரிக்கையான ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Aude, Calvados, South Corsica, Haute-Corse, Côtes d'Armor, Eure, Finistère, Gironde, Hérault, Ille-et-Vilaine, Landes, Manche, Mayenne, Morbihan, Nord, Oise, Orne, Pas-de-Calais, Pyrénées-Atlantiques, Pyrénées-Orientales, Seine-Maritime, Somme ம்ற்றும் Andorra ஆகிய மாவட்டங்களுக்கு இந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ வரை காற்று வீசலாம் என Météo-France அறிவித்துள்ளது.