16 எண்கள் இல்லாத - புதிய வங்கி அட்டை!!
8 மார்கழி 2024 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 3575
வங்கிகளில் வழங்கப்படும் மீள் நிரப்பு அட்டைகள் அல்லது பணம் எடுக்க பயன்படுத்தப்படும் அட்டைகளின் வடிவங்கள் மாறுதலுக்கு உள்ளாகின்றன.
இதுவரை வழங்கப்படும் அட்டைகளில், வெளிப்புறத்தில் பார்வையிடக்கூடிய வகையிலும், பார்வையற்றவர்கள் அறிந்துகொள்ளக்கூடியதாகவும் 16 எண்கள் கொண்ட இலக்கங்கள் அச்சிடப்பட்டிருக்கும். அந்த முறை விரைவில் மாறுதலுக்கு உள்ளாகிறது.
வெளியே தெரியும் இந்த இலக்கங்களினால் அட்டைகள் ‘ஹாக்’ செய்யப்படுவதாகவும், அவற்றை உரிமையாளர் தவிர ஏனையரும் பயன்படுத்தக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வங்கி அட்டைகள் விரைவில் மாற்றமடைய உள்ளன. ஸ்பெயில் இந்த முறை பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பிரான்ஸ் இதனை மிகவும் தாமதாக 2030 ஆம் ஆண்டின் பின்னரே மாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.