Paristamil Navigation Paristamil advert login

மே 1968! - என்ன நடந்தது??

மே 1968! - என்ன நடந்தது??

7 மார்கழி 2018 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18119


அந்த மூன்று கோரிக்கைகள் இவ்வாறு இருந்தது. 
 
<< முதலாவது கோரிக்கை, கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் நிபந்தனைகள் இன்றி குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டு, விடுவிக்கப்படவேண்டும். 
 
இரண்டாவது கோரிக்கை, பல்கலைக்கழகங்களை விட்டு காவல்துறையினர் வெளியேற வேண்டும் 
 
மூன்றாவது கோரிக்கை, Nanterre மற்றும் Sorbonne பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படவேண்டும். >>
 
இந்த மூன்று கோரிக்கையில், அரசு இரண்டை நிறைவேற்றியது. பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டதோடு, மாணவர்களையும் விடுவித்தனர். ஆனால் பல்கலைக்கழகத்தில் இருந்து காவல்துறையினர் வெளியேற மறுத்தனர். 
 
ஆர்ப்பாட்டம் மட்டும் கைவிடப்படவில்லை!! 
 
மே மாதம் 10 ஆம் திகதி  Rive Gauche ஆற்றங்கரையினை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கினர். அதில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது. பல நூறு பேர் கைது 
செய்யப்பட்டனர். 
 
மே 13 ஆம் திகதி, மிகப்பெரும் பாய்ச்சலாக, CGT தொழிற்சங்கமும் CGT-FO தொழிற்சங்கமும் இணைந்து வீதியில் இறங்கின. 
 
அன்றைய ஒரு நாளில், பரிசுக்குள் மாத்திரம் ஒரு மில்லியன் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வரலாற்றில் முன்னெப்போதும் அதுபோன்ற சம்பவம் இடம்பெற்றிருந்ததாக எந்த தடயமும் இருந்திருக்கவில்லை. 
 
தரவுகள் மாற்றி எழுதப்பட்டது!!
 
(நாளை...)

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்