இரண்டாவது நாளாக நோர்து-டேம் தேவாலய நிகழ்வுகள்! - ஜனாதிபதி பங்கேற்பு!!
8 மார்கழி 2024 ஞாயிறு 12:53 | பார்வைகள் : 2194
நேற்று டிசம்பர் 7 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்ட நோர்து-டேம் தேவாலயத்தில் இன்று இரண்டாவது நாளாக சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் பல்வேறு விதங்களிலான வழிபாடுகள், சிறப்பு பாடல்கள் என வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், முதல் பெண்மணி பிர்ஜித் மக்ரோனும் இதில் பங்கேற்றுள்ளனர். அதேவேளை, இன்று மாலை முதல் பொதுமக்கள் வழிபாடுகளில் பங்கேற்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுச்சிட்டைகள் (கட்டணமற்ற) பெற்றுக்கொள்வதன் மூலம் உள்ளே செல்ல முடியும் எனவும், புதிதான புனரமைக்கப்பட்ட தேவாலயத்தை பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 150 பாதிரியார்கள் வரிசைக்கிரமாக அணிவகுத்து, நற்கருணை பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.