Paristamil Navigation Paristamil advert login

மே 1968! - என்ன நடந்தது??

மே 1968! - என்ன நடந்தது??

6 மார்கழி 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 18229


கடந்த சனிக்கிழமை பரிசில் மிகப்பெரும் வன்முறை வெடித்தது. பரிஸ் நகர முதல்வர் 'மே 68 க்குப் பின்னர் இதுபோன்ற வன்முறை வெடிக்கிறது!' என தெரிவித்திருந்தார். மே 1968... என்ன நடந்தது??!!
 
மே மாதம் 1968 ஆம் ஆண்டு பல்வேறு அமைப்புககைச் சேர்ந்த, தொழிற்சங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட நாடு முழுவதும் ஸ்தம்பித்திருந்தது. குறிப்பாக மாணவர்கள் அனைவரும் வீதியில் இறங்கினர். 
 
ஜனாதிபதி சாள்-து-கோல் மற்றும் பிரதமர்  Georges Pompidou ஆகியோரின் தலைமையிலான அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 
 
 
இரண்டு முக்கிய அரசியல் கட்சியான Parti communiste français மற்றும் Parti socialiste ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து, ஜனாதிபதி சாள்-து-கோல் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்தார்கள். ஆனால் அது பொய்த்துப்போக, ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார்கள். 
 
இந்த ஆர்ப்பாட்டம் மே மாதம் 3 ஆம் திகதி தொடங்கியது. ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் மாணவர்கள் தான் பங்கேற்றுக்கொண்டனர்.  Paris Nanterre University மாணவர்களும்,  Sorbonne University மாணவர்களும் ஆப்பாட்டத்தை மிக தீவிரமான பாதைக்கு கொண்டு சென்றார்கள். 
 
ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த மூன்றாம் நாள், Union Nationale des Étudiants de France (தேசிய மாணவர்கள் சங்கம்) மாணவர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். கல்லூரிகள் முடக்கப்பட்டு, வீதிகள், போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு வீதி எங்கும் ஆர்ப்பாட்டம், வன்முறை வெறியாட்டம் அரங்கேறியது. 
 
Sorbonne பல்கலைக்கழக த்தை 22,000 மாணவர்கள் முற்றுகையிட்டனர். காவல்துறையினர்  மீது கல்வீச்சு தாக்குதல்கலும் மேற்கொண்டனர். பல ஆயிரம் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். 
 
இது இப்படி இருக்க, ஆர்ப்பாட்டத்தில் ஔத்ததாக களம் இறங்கியது தொழிற்சங்கங்களைச் சேர்ந்த்த ஊழியர்களும், பொது மக்களும். 
 
Arc de Triomphe ஐ நோக்கி பெரும் படை ஒன்று முன்னோக்கி வந்தது. வரலாறு காணாத வன்முறை. பரிசுக்குள் ஒரு கடைகள் மிஞ்சவில்லை. ஒரு வாகனம் கூட நகரவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று கோரிக்கையை முன் வைத்தனர். 
 
(நாளை....)

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்