ஓன்லைனில் ஸ்டிக்கர் விற்று மாதம் 16 இலட்சம் சாம்பதிக்கும் பிரித்தானிய சிறுவன்!
9 மார்கழி 2024 திங்கள் 06:41 | பார்வைகள் : 146
பிரித்தானியாவில் ஆன்லைனில் ஸ்டிக்கர்களை விற்பனை செய்து மாதம் ரூ.16 லட்சம் சம்பாதிக்கும் இளைஞன் ஒருவர் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
இங்கிலாந்தில் லங்காஷையர் பகுதியை சேர்ந்த 17 வயதான கேலன் மெக்டொனால்ட் என்ற இளைஞன் ஸ்டிக்கர்கள் தயாரிப்பதில் ஆர்வமாக இருந்தார்.
இதையறிந்த அவரது தாயார் கரேன் நியூஷாம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பரிசாக தனது மகனுக்கு ஒரு டிஜிட்டல் கைவினை எந்திரத்தை பரிசாக வழங்கினார்.
இதன்மூலம் கண்ணாடி பொருட்களில் ஒட்டுவதற்காக ஸ்டிக்கர்களை உருவாக்கி அவற்றை முகநூலில் பதிவிட்டார்.
புதுமையான வடிவமைப்புடன் கூடிய இந்த ஸ்டிக்கர்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இதன்மூலம் நல்ல வருமானம் ஈட்டியுள்ளார்.
2024 தொடக்கத்தில் மாதத்திற்கு 200 ஸ்டிக்கர்கள் விற்பனை செய்தார். கல்லூரிக்கு சென்று வந்த பிறகு தினமும் 3 மணித்தியாலங்கள் வீட்டில் ஸ்டிக்கர்கள் தயாரிக்க செலவிட்டார்.
பின்னர் தொழில் ரீதியாக பெரிய பிரிண்டர்களை வாங்கி கடந்த ஜூலை மாதம் முதல் அதிக அளவிலான ஸ்டிக்கர்களை தயாரித்து ஒன்லைன் மூலம் விற்பனை செய்தார்.
டிக்டொக் மற்றும் பிற வணிக ரீதியிலான வலைதளங்கள் மூலம் இதுவரை இந்திய மதிப்பில் ரூ.83 லட்சம் வரை ஸ்டிக்கர்ளை விற்பனை செய்துள்ள கேலன் மெக்டொனால்ட் மாதம் சராசரியாக ரூ.16 லட்சம் வரை வருமானம் ஈட்டு வருகின்றனர்.