சிரிய அதிபருக்கு அடைக்கலம் கொடுத்த ரஷ்யா!
9 மார்கழி 2024 திங்கள் 07:33 | பார்வைகள் : 1694
சிரிய அதிபர் பஷார் அல்-அசாதுக் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.
நாட்டைவிட்டு தப்பியோடிய சிரிய அதிபர் பஷார் அல்-அசாதுக்கு (Bashar al-Assad) அடைக்கலம் வழங்கியிருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
தலைநகர் டமாஸ்கஸிலிருந்து தப்பிச் சென்ற அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆதரிப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு கூறியது. அசாதின் ஆட்சியின்போது சிரியாவின் முக்கிய நட்பு நாடாக ரஷ்யா இருந்தது.
இந்நிலையில் நேற்று (8 டிசம்பர்) ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (Hayat Tahrir al-Sham) என்ற கிளர்ச்சிக் குழு அதிபர் அசாதின் ஆட்சியைக் கவிழ்த்ததை அடுத்து அவர் நாட்டைவிட்டு வெளியேறினார்.
அதேவேலை சிரியாவில் அசாதின் ஆட்சி முடிவுக்கு வந்ததை மக்கள் பெரிய அளவில் சாலைகளில் கொண்டாடினர்.