வாட்ஸ்அப்பில் வீடியோ கால்கள் வரவில்லை என்றால் settings-ல் மாற்றவேண்டிய வழிமுறை
9 மார்கழி 2024 திங்கள் 07:52 | பார்வைகள் : 213
வாட்ஸ்அப்பில் வீடியோ கால்கள் வரவில்லை என்றால் settings-ல் மாற்றவேண்டிய வழிமுறை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வாட்ஸ்அப் மூலம் மெசேஜிங், வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் செய்வதற்கு மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் . அதன்படி, வாட்ஸ்அப்பில் வீடியோ கால்கள் வரவில்லை என்றால் settings-ல் இது போன்ற வழிமுறைகளைச் செய்யலாம்.
முதலில் உங்கள் மொபைலின் வாட்ஸ் அப் ஐகானைத் டேப் செய்து ஆப் இன்ஃபோ-.கிளிக் செய்தவுடன், கால் லாக், கேமரா, கான்டெக்ட், லொகேஷன் போன்ற ஆப்ஷன்கள் தோன்றும்.
அப்போது நீங்கள் கேமரா மற்றும் மைக்ரோஃபோன் ஆகிய இரண்டு செட்டிங்களை மட்டுமே மாற்ற வேண்டும் கேமரா ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் .
இதனையடுத்து ஆப்பைப் பயன்படுத்தும் போது மட்டும் அனுமதி என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம், வாட்ஸ் அப்பின் கேமராவை அக்சஸ் செய்ய முடியும். மேலும் வாட்ஸ் அப்பின் பர்மிஷன் பக்கத்திற்குச் செல்லவும்.
இப்போது நீங்கள் மைக்ரோஃபோன் அக்சஸ்- ஐ இயக்க வேண்டும், அதில் தோன்றும் மைக்ரோஃபோன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதைத் செலக்ட் செய்த பிறகு அனுமதி என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.