இலங்கையில் ரஷ்ய தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

9 மார்கழி 2024 திங்கள் 09:16 | பார்வைகள் : 3069
கொடவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய தம்பதியொன்று நீரோட்டத்தில் சிக்கி கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பின்னர் மாத்தறை வலய பொலிஸ் உயிர்காப்பு பிரிவில் கடமையாற்றிய சில பொலிஸ் உத்தியோகத்தர்களினால் இவர்கள் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வௌிநாட்டு தம்பதியினரை சார்ஜன்ட் - 72167 மஞ்சுள, பொலிஸ் கான்ஸ்டபிள் 36992 பண்டார மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 28244 சாமர ஆகியோர் காப்பாற்றியுள்ளனர்.
ரஷ்ய பிரஜைகளான 40 வயதுடைய ஆணும் 38 வயதுடைய பெண்ணொருவருமே குறித்த சம்பவத்திற்கு முகங்கொடுத்திருந்தனர்.