Paristamil Navigation Paristamil advert login

STIF என்ன ஆனது??!

STIF என்ன ஆனது??!

3 மார்கழி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 18384


சமீப நாட்களில் STIF எனும் பெயரை எங்கேயும் காணவில்லையே என யோசித்ததுண்டா? இன்றைய பிரெஞ்சு புதினத்தில் உங்களுக்கு விடை கிடைக்கும்!!
 
STIF என்றால் Syndicat des Transports d'Île-de-France என்று அர்த்தம். அதாவது இல்-து-பிரான்சுக்கான பொது போக்குவரத்து கழகம். 
 
 
1959 ஆம் ஆண்டு இந்த கழகம் உருவாக்கப்பட்டது. அரசு தரப்பில் இந்த கழகம் உருவாக்கப்பட்ட போதும், கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து இந்த STIF, அரசை நம்பி இயங்காமல் தனித்து இயங்குகிறது. 
 
அதாவது, 'முடிவுகள்' முழுவதையும் STIF யே எடுக்கும். போக்குவரத்தை விஸ்தரிக்கனுமா..? புது தொடரூந்து விடனுமா... பயணச்சீட்டு விலை அதிகரிக்கனுமா...? எல்லா முடிவுமே STIFயே எடுக்கும். 
 
தற்போது இந்த கழகத்துக்கு முதல்வராக உள்ள Valérie Pécresse, இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வரும் கூட. 
 
நவிகோ அட்டையின் விலை இரண்டொரு தடவைகள் அதிகரித்திருந்தாலும், பல்வேறு வசதிகளையும் நலத்திட்டங்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டே உள்ளார். 
 
இவர் தான் STIF எனும் பெயரை மாற்றினார். 
 
கடந்தவருடம் ஜூன் மாதத்தில் இருந்து  Île-de-France Mobilités எனும் புது பெயருடன் இந்த கழகம் இயங்கும் என அறிவித்தார். 
 
STIF தற்போது Île-de-France Mobilités எனவும், அதன் பெயர் சுருங்கி, IDF Mobilités எனவும் அழைக்கப்படுகிறது. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்