நோர்து-டேம் தேவாலயத்தில் ஒரு ரகசியம்!!
10 மார்கழி 2024 செவ்வாய் 08:05 | பார்வைகள் : 2374
நோர்து-டேம் தேவாலயம் தீ விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் எரிந்து சேதடைந்த பல ஆயிரக்கணக்கான பொருட்களை மீட்டு ரகசியமான இடம் ஒன்றில் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிந்த மரப்பலகைகள், கரித்துண்டுகள், கண்ணாடிகள், அலுமினிய துண்டுகள், கற்கள் போன்ற பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை மீட்டு, சேமிப்பகம் ஒன்றில் வைத்து பாதுகாக்கப்படுவதாகவும், ஆனால் அதன் இடம் குறித்த தகவல்களை வெளியிடாமல் ரகசியம் பேணுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அந்த பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீவிபத்துக்குள்ளான அடுத்த சில நாட்களில் அவை சேகரிக்கப்பட்டு இடம் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.