Bic எனும் சிறுவன்!!
24 கார்த்திகை 2018 சனி 10:30 | பார்வைகள் : 17933
முந்தைய பிரெஞ்சு புதினத்தில் Bic நிறுவனம் குறித்தும் அதன் தோற்றம் குறித்து பார்த்திருந்தோம். இன்றைய பிரெஞ்சு புதினத்தில் அதன் பெயர் குறித்த சில தகவல்களை பார்க்கலாம்..!!
முதலில் Bic என்பதை 'BiC' என எழுத வேண்டும். அதன் இலட்சினைகளை உற்று கவனித்தால் தெரியும்... முதல் எழுத்தும், மூன்றாவது எழுத்தும் 'பெரிய' எழுத்திலும்... நடுவில் உள்ள 'i' எனும் எழுத்து சிறிய எழுத்திலும் எழுதப்பட்டிருக்கும்.
BiC என்பது ஒரு சிறுவனைக் குறிக்கும். BiC Boy என்பது ஒரு 'பாடசாலை படிக்கும் மாணவன்' எனும் அர்த்தத்தில் வரும்.
ஏன் அபடி ஒரு அர்த்தத்தில் வைத்தார்கள் என்றால், 1950 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்த நிறுவனம் ஒரு 'கிறிஸ்ட்டல்' பேனையை தான் தயாரித்தது. மிகவும் வித்தியாசமாகவும், புதிய கண்டுபிடிப்பாகவும் அந்த பேனை இருந்தது.
அந்த பேனையில் tungsten மற்றும் carbide என இரண்டு மூலப்பொருட்கள் இருந்தன. இந்த பேனையை பாடசாலை மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்க ஒரு திட்டம் தீட்டினார்கள்.
அதன் விளைவாக உதயமானது தான் 'BiC Boy' எனும் சிறுவன்.
BiC இலட்சினைக்கு அருகே பாருங்கள் ஒரு பாடசாலைச் சிறுவன் உருண்டையான தலையைக் கொண்டு இருப்பான்... அவனுடைய முதுகில் ஒரு இராட்சத பேனை ஒரு தொங்கும்.
அவ்வளது தான்... அந்த இலட்சினை எதிர்பாரா அளவு மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, பேனையும் அசுர விற்பனையைக் கண்டது.
அந்த சிறுவனின் தலை உருண்டையாக இருப்பதோடு, கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். அதில் ஒன்று tungstenஐயும், மற்றையது carbideஐயும் குறிக்கும்.
1961 ஆம் ஆண்டு, குறித்த சிறுவனை BiC இலட்சினையின் இடது பக்கத்தில் சேர்த்துக்கொண்டனர்.