மிதக்கும் தண்ணீரை குடிக்கும் சுனிதா வில்லியம்ஸ்
10 மார்கழி 2024 செவ்வாய் 08:10 | பார்வைகள் : 136
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தவாறு மாணவர்களின் கேள்விகளுக்கு சுனிதா வில்லியம்ஸ் பதில் அளித்த வீடியோ வெளியாகியுள்ளது.
போயிங் நிறுவனத்தின் ஸ்டர்லைனர் விண்கலத்தில் பயணம் செய்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
அவர்கள் இருவரும் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பாடசாலை ஒன்றின் சார்பில் சுனிதா வில்லியம்ஸ் உடன் உரையாடும் ஒன்லைன் நிகழ்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்பட்டது.
அப்போது விண்வெளியில் Zero Gravityயில் எப்படி தண்ணீர் குடிப்போம் என சுனிதா வில்லியம்ஸ் விளக்கி காட்டினார்.
அவர் தனது மூடப்பட்டிருந்த Pouches எடுத்து, அதன் நடுவில் ஸ்ட்ரா உள்ளதை காட்டுகிறார். தண்ணீர் பையை அவர் அழுத்தும்போது நீர்த்துளிகள் வெளியில் மிதக்கிறது.
உடனே அவர் மிதந்து செல்லும் துளிகளை குடிக்கிறார். இதன்மூலம் அங்கு காற்று இல்லை என்பதால் நீர் மிதப்பதை விளக்குகிறார்.