பிரான்சில்... கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!!
10 மார்கழி 2024 செவ்வாய் 13:03 | பார்வைகள் : 2021
இந்த 2024 ஆம் ஆண்டில் பிரெஞ்சு மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளின் விபரங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த வருடம் பிரான்சில் அரசியலில் பலத்த மாற்றங்களை சந்தித்திருந்தது. அத்துடன் ஒலிம்பிக் போட்டிகளும் இடம்பெற்றிருந்தது. இவ்விரண்டு பிரிவுகளிலும் அதிகமாக கூகுளொ தேடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளில் அதிகம் தேடப்பட்டவர் மூன்றுமாத கால பிரதமராக இருந்த Michel Barnier ஆவார். அவருக்கு அடுத்ததாக முன்னாள் பிரதமர் Gabriel Attal உள்ளார். RN கட்சித் தலைவர் Jordan Bardella உள்ளார். நான்காவது இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் Lucie Castets, Kamala Harris போன்ற சர்வதேச பிரபலங்கள் உள்ளனர்.
விளையாட்டுத் துறையில், முதலிடத்தில் l'Euro 2024 எனும் வார்த்தையும், இரண்டாவது இடத்தில் JO (ஒலிம்பிக்) அடுத்ததாக la Coupe d'Afrique des Nations போன்ற வார்த்தைகளும் தேடப்பட்டுள்ளன.