சிரிய ஆயுதக்குழுவில்... பத்து பிரெஞ்சு பயங்கரவாதிகள்!!
10 மார்கழி 2024 செவ்வாய் 15:58 | பார்வைகள் : 2249
சிரியாவில் உள்ள Hayat Tahrir al-Sham புரட்சிக்குழுவில் பத்து பிரெஞ்சு பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கப்படுகிறது.
சிரியாவின் தலைநகர் Damascus இனை ஆயுதக்குழுக்கள் முற்றுகையிட்டுள்ளனர். Hayat Tahrir al-Sham எனும் ஆயுதக்குழுவினரும் இந்த முற்றுகையில் இணைந்துள்ளனர். இந்நிலையில், அவர்களது அமைப்பில் பிரான்சைச் சேர்ந்த/ பிரான்சுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட பத்து ஜிகாதிப் பயங்கரவாதிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் அங்கு ஆயுத நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்களா என்பது தொடர்பில் தகவல் இல்லை.
சிரியாவில் நூற்றுக்கணக்கான பிரெஞ்சு ஜிகாதிப் பயங்கரவாதிகள் உள்ளதாகவும், அவர்கள் அங்குள்ள ஏதேனும் ஆயுதக்குழுக்களுடன் இணைந்து செயற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.