விசேட செய்தி : 48 மணிநேரத்தில் புதிய பிரதமர்!!
10 மார்கழி 2024 செவ்வாய் 16:24 | பார்வைகள் : 2322
அடுத்து வரும் 48 மணிநேரத்தில் நாட்டின் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுடன் பல்வேறு அரசியல் தலைவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகலின் பின்னர் எலிசே மாளிகையில் வைத்து சந்திப்பினை மேற்கொண்டுள்ளனர். இரண்டரை மணிநேரம் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அறிய முடிகிறது.
இந்நிலையில், அடுத்துவரும் 48 மணிநேரத்தில் புதிய பிரதமரை நியமிக்கும் முனைப்புடன் ஜனாதிபதி மக்ரோன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.