பரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்!!
10 கார்த்திகை 2018 சனி 12:30 | பார்வைகள் : 17854
சென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.
777 கிலோமீட்டர்கள் நீளம் கொண்ட சென் நதியில் இரண்டு தீவுகள் அமைக்கப்பட்டுள்ளனர். இரண்டுமே பரிசுக்குள் தான் உள்ளன.
ஒன்று செயற்கையாக அமைக்கப்பட்ட, Ile de la Cité. இது குறித்த பல தகவல்களை முன்னர் பல தடவைகள் வழங்கியிருந்தோம். இரண்டாவது Ile Saint-Louis தீவு. இது பரிஸ் நான்காம் வட்டாரத்தில் உள்ளது. மொத்தம் நான்கு பாலங்கள் இந்த தீவை கரையோடு இணைக்கின்றன.
கிழக்கு பரிசில் இருந்து மேற்கு பரிஸ் நோக்கி சென் நதி பாய்கிறது. பாரிசுக்குள் மொத்தம் 13 கிலோமீட்டர்கள் பயணிக்கின்றது.
பரிசுக்குள், கடல் மட்டத்தில் இருந்து 27 மீட்டர்கள் உயரத்தில் பாய்கிறது சென்!
பரிசுக்குள் சென் நதி அதிக பட்ச ஆழமாக 31 அடி உள்ளது. (9.5 மீட்டர்கள்)
பரிசுக்குள் பாயும் சென் நதியின் மேல் ஊடறுக்கு மேம்பாலங்களின் மொத்த எண்ணிக்கை 37.
அதேபோன்று, பரிசுக்குள் சென் நதியை ஒட்டி இருக்கும் மிக பழமையான கட்டிடம் Pont Neuf. 1578 இல் இருந்து 1607 வரையான காலப்பகுதிக்குள் கட்டப்பட்டது.