Paristamil Navigation Paristamil advert login

சிரியாவின் இடைக்கால பிரதமராக முகமது அல் பஷீர்

 சிரியாவின் இடைக்கால பிரதமராக முகமது அல் பஷீர்

11 மார்கழி 2024 புதன் 09:27 | பார்வைகள் : 560


சிரிய நாடானது கிளர்ச்சியாளர்களின் கைகளில் சிக்கியுள்ளது.

இந்நிலையில் சிரிய அரசின் இடைக்கால பிரதமராக முகமது அல் பஷீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முகமது அல் பஷீர் நியமனம் மார்ச் 1, 2025 வரை அமுலில் இருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முகமது அல் பஷீர் முன்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்தின் தலைவராக பணியாற்றினார். சிரியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்த அல்-அசாத், கடந்த 8-ம் திகதி பதவியை விட்டு வெளியேறி நாட்டை விட்டும் வெளியேறினார்.

அல்-அசாத் தற்போது ரஷ்யாவின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்