வேட்டை நாய் பந்தயத்துக்கு நிரத்தர தடை விதிக்கும் பிரபல நாடு
11 மார்கழி 2024 புதன் 10:12 | பார்வைகள் : 399
நியூசிலாந்தில் வேட்டை நாய்களை பயன்படுத்தி ஓட்டப்பந்தயம் நடத்துவது அந்நாட்டின் கலாசாரங்களில் ஒன்றாக உள்ளது.
இதற்காக 'கிரே ஹவுண்டு' என்னும் வேட்டை நாய்கள் இன குட்டிகளை சிறுவயதில் இருந்து வளர்த்து அதற்காக தயார்படுத்தி வந்தனர். அண்மையில் இந்த வேட்டை நாய்கள் பந்தயதுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நல அமைப்புகள் போராட்டம் நடத்தின.
போதைப்பொருள் கொடுத்தும், மிக கொடூரமாக துன்புறுத்தப்பட்டும் இந்த பந்தயத்துக்கு அவை தயார்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதனை தொடர்ந்து நியூசிலாந்து பாராளுமன்றத்தில் வேட்டை நாய் பந்தயத்துக்கு தடை விதிக்கும் வகையிலான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஆதரவுடன் நிறைவேறியது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்த பந்தயம் மிக பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.