Source-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்!!
9 கார்த்திகை 2018 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18001
ஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதாரணமாக கடந்துவிட முடியாது. என்ன ஆச்சரியம்..?? பார்க்கலாம்...
சென் நதி குறித்த ஏராளமான தகவல்கள் நாம் பிரெஞ்சு புதினத்தில் வாசித்திருந்தாலும், இன்னமும் ஆச்சரியம் குறையாத ஒன்று இந்த சென் நதி..!
சென் நதி மொத்தம் 777 கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டது. பிரான்சில் இரண்டாவது மிகப்பெரும் நதி.
இந்த சென் நதி Source-Seine எனும் இந்த கிராமத்தில் இருந்தே பிறக்கின்றது.
Côte-d'Or மாவட்டத்தில் உள்ள இந்த கிராமம் Dijon நகரத்தில் இருந்து வட மேற்காக 30 கி.மீ தூரத்தில் உள்ளது.
சென் நதி இங்கிருந்தே புறப்படுகிறது என்பதால், இந்த கிராமத்துக்கு Source-Seine என பெயர் வைத்துள்ளார்கள். இதை ஒரு கிராமமாக ஜனவரி 1, 2009 ஆம் ஆண்டில் தான் அறிவித்தார்கள்.
கி.மு முதலாம் நூற்றாண்டில் இருந்து இங்கு நீரூற்று புறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட இந்த கிராமத்தில், தற்போது 50 பேர் மாத்திரமே வசித்து வருகின்றனர் என்பது ஒரு ஆச்சரியமான தகவல்!!