Arc de Triomphe : மர்ம தொலைபேசி அழைப்பு.. வெளியேற்றம்!!
11 மார்கழி 2024 புதன் 11:44 | பார்வைகள் : 1071
தொலைபேசி வழியாக வந்த அச்சுறுத்தலை அடுத்து Arc de Triomphe கட்டிடம் வெளியேற்றப்பட்டுள்ளது.
இன்று டிசம்பர் 11, புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் தொலைபேசி அழைப்பு மூலம் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், அப்பகுதி முழுவதும் தேடப்பட்டது. ஆனால் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நிலமை வழமைக்கு திரும்பியுள்ளது.