150வது ஒருநாள் போட்டி! முதல் அவுஸ்திரேலிய வீராங்கனையாக எல்லீஸ் பெர்ரி சாதனை
11 மார்கழி 2024 புதன் 12:12 | பார்வைகள் : 119
அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீராங்கனை எல்லீஸ் பெர்ரி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லீஸ் பெர்ரி (Ellyse Perry) தனது 150வது ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளார்.
இதன் மூலம் 150 ஒருநாள் போட்டிகளில்(women's ODIs ) பங்கேற்ற முதல் அவுஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையை எல்லீஸ் பெர்ரி பெற்றுள்ளார்.
சர்வதேச அளவில் 150 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் விளையாடிய வீராங்கனைகள் பட்டியலில் 8 வது வீரராக எல்லீஸ் பெர்ரி இடம் பிடித்துள்ளார்.
முதலிடத்தில் இந்திய வீராங்கனை மித்தாலி ராஜ் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார்.
மகளிர் ஐபிஎல் தொடரில் கடந்த முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற பெங்களூரு அணியில் விளையாடிய எல்லீஸ் பெர்ரி இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.