Paristamil Navigation Paristamil advert login

தனுஷின் கனவு திரைப்படம் டிராப்பா?

தனுஷின் கனவு திரைப்படம் டிராப்பா?

11 மார்கழி 2024 புதன் 12:09 | பார்வைகள் : 137


தனுஷ் நடிக்க இருந்த அவரது கனவு திரைப்படம் டிராப் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணியை கமல்ஹாசன் பொறுப்பேற்று அந்தன் பணியும் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பொறுப்பிலிருந்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் விலகியதாகவும் செய்திகள் வெளியானது.

அதன் பிறகு, இந்த படத்தை பற்றி எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது இந்த படம் கைவிடப்பட்டதாகவும், அதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இருப்பினும், இந்த படம் ட்ராப் என்பது குறித்து எந்த விதமான அறிவிப்பும் படக்குழுவினர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்