Paristamil Navigation Paristamil advert login

சூர்யாவின் அதிரடி முடிவு..

சூர்யாவின் அதிரடி முடிவு..

11 மார்கழி 2024 புதன் 12:14 | பார்வைகள் : 2490


40 நாட்களில் சூர்யா ஒரு படத்தில் நடித்து முடிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கான இயக்குரையும் அவர் தேர்வு செய்து விட்டதாகவும் கூறப்படுவது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூர்யா 44’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதையடுத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 45’ படத்தில் அவர் நடித்து வரும் நிலையில், அடுத்த கட்டமாக அவர் பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

பீஷ்மா பருவம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய அமல் நீரத் சொன்ன கதை சூர்யாவுக்கு பிடித்து விட்டதாகவும், இந்த படத்தை மொத்தமாகவே முடிக்க 40 நாட்கள் போதும் என்று இயக்குனர் கூறியதை அடுத்து சூர்யா இந்த படத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, ஆர்.ஜே. பாலாஜி படத்தை முடித்தவுடன் அமல் நீரத் படத்தில் சூர்யா இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்