Paristamil Navigation Paristamil advert login

நீங்க உங்க உறவில் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகத்துக்கு ஆளாகுறீங்களா?

நீங்க உங்க உறவில் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகத்துக்கு ஆளாகுறீங்களா?

11 மார்கழி 2024 புதன் 12:30 | பார்வைகள் : 150


ஒவ்வொரு உறவிலும் சண்டை சச்சரவுகள் இருப்பது என்பது சாதாரணம் தான். ஆனால் அந்த உறவுகளில் உள்ள சண்டைக்கும், குறுக்கீடுக்கும் வித்தியாசம் உள்ளது. அதுவும் திருமணத்திற்கு பின் உங்களால் உங்களுக்கு பிடித்தவாறான வாழ்க்கையை வாழ முடியாமல், உங்கள் துணையின் விருப்பப்படி, அவரது வற்புறுத்தலின் பேரில் ஒவ்வொரு விஷயத்தையும் நீங்கள் செய்து வந்தால், நீங்கள் ஒரு மோசமான உணர்ச்சிரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருக்கலாம்.

உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் என்பது ஒருவரது விருப்பு வெறுப்புக்களை புறக்கணித்து, சொந்த விருப்பத்திற்கு ஏற்ப வாழ்க்கையை வாழ விடாமல் மற்றவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வாழ கட்டாயப்படுத்தும் ஒரு மோசமான நடத்தையாகும். இப்படியான ஒரு விஷயம் ஒருவரது தைரியம், நம்பிக்கை, சுதந்திரத்தை அழிக்கும். உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் செய்பவர்கள் அன்பு, காதல், பாசம் என்ற பெயரில் தனது துணையை தன் விருப்பத்திற்கு ஏற்ப வாழ கட்டாயப்படுத்துவார். மேலும் இத்தகையவர்கள் தங்கள் துணையின் ஒவ்வொரு செயலிலும் தனது கட்டுப்பாட்டை நிறுவ முயற்சிப்பார்கள்.

உடல் ரீதியான துஷ்பிரயோகத்தைப் போலல்லாமல், மனரீதியான துஷ்பிரயோகத்தால் ஏற்படும் காயத்தை அடையாளம் கண்டு எதிர்கொள்வது கடினம். எனவே மனரீதியான துஷ்பிரயோகத்தின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது உடல் ரீதியான சேதத்தைப் போலவே மனதளவில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும். இப்போது உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகத்தின் அறிகுறிகளை காண்போம்.

1. நீங்கள் தவறு என்பதை உணர்வது
உணர்ச்சிரீதியான துஷ்பிரயோகத்தின் முதல் அறிகுறி, நீங்கள் எப்போதும் தவறாக உணரப்படுவது. உங்களை துஷ்பிரயோகம் செய்பவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்கள் மீது குற்றம் சாட்டுவார். நீங்கள் சொல்வது, செய்வது அனைத்தும் தவறு என்று உங்களை உணர வைப்பார். இப்படியானா நடத்தை உங்களின் தன்னம்பிக்கையை பலவீனப்படுத்து மட்டுமின்றி, ஒவ்வொரு செயலிலும் அவரது ஆலோசனையை பெற்று, அவரது கட்டுப்பாட்டில் இருக்க தூண்டுகிறது.

2. தனிமையை உணர்வது
நீங்கள் உணர்ச்சிரீதியான துஷ்பிரயோகம் செய்பவர்கள் எப்போதும் தங்கள் துணையை குடும்பத்தினர், நண்பர்களிடம் இருந்து தனிமைப்படுத்துவார்கள். எனவே நீங்கள் உங்கள் உறவில் தனிமையையும், பாதுகாப்பற்ற சூழலையும் உணர்ந்தால், மனரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

3. மிகுந்த பயம்
ஒருவர் உங்களை உணர்ச்சிரீதியாக துஷ்பிரயோகம் செய்தால், அந்நபர் எப்போதும் உங்களை கத்தவோ, அச்சுறுத்தவோ அல்லது எந்நேரமும் அவமானப்படுத்தவோ செய்யலாம். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் அச்சத்துடனான வாழ்க்கையை வாழ நேரிடும். மேலும் இப்படியான பயத்தினால் எந்த முடிவையம் எடுக்க பயப்படுவார்.

4. மனகுழப்பம்
ஒருவரை உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் செய்பவர்கள், அந்நபரை பைத்தியம் பிடித்தது போல் உணர வைப்பார். மனதைக் குழப்பம் வகையிலான பல கேள்விகளை கேட்டு, ஆழமாக சிந்திக்க வைப்பதோடு, தங்களைத் தாங்களே குற்றம் சொல்லும் வகையில் மாற்றுவார். இப்படி மனக்குழப்பத்தை ஏற்படுத்த காரணம், உங்களை பலவீனப்படுத்துவதோடு, மற்றவரிடம் உதவி கேட்பதையும் தடுப்பதாகும்.

உணர்ச்சிரீதியான துஷ்பிரயோகத்தால் ஒருவர் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வந்தால், அது அந்நபரின் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். சொல்லப்போனால், ஒரு உறவில் உணர்ச்சிரீதியான துஷ்பிரயோகம் என்பது ஒரு குடும்ப வன்முறையின் கீழ் வரும். எனவே உங்கள் உறவில் உங்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டாலோ அல்லது உங்களின் உரிமைகள் தடுக்கப்பட்டாலோ, சட்ட உதவியை யோசிக்காமல் நாடலாம்.

முடிவு
பெண்களின் உரிமைகளை பாதுகாக்க, குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் (PWDVA) 2005 இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டம் பெண்களுக்கு உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்பில் இருந்து பாதுகாப்பை வழங்குவதோடு, நிவாரணம் அளிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. பெண்கள் தங்களுக்கு நேரும் அநியாயத்தை காவல்துறை அல்லது மாஜிஸ்திரேட்டிடம் புகார் செய்யலாம். மேலும் சட்ட உதவிக்காக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் உதவியும் வழங்கப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்