உலகம் தழுவிய RATP - சில தகவல்கள்!!
8 கார்த்திகை 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 17865
பிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.
இல்-து-பிரான்சுக்குள் மிக தீவிரமாக சேவையை மேற்கொண்டு வருகிறது என்ற போதும், உலகம் முழுவதும் இந்த நிறுவனம் தனது சேவைகளை வழங்கி வருகின்றது.
RATP என்றால், Régie Autonome des Transports Parisiens என அர்த்தம். 69 ஆண்டுகளுக்கு முன்னர், ஜனவரி முதலாம் திகதி 1949 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் பரிசில் உருவாக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட தகவல்களின் படி RATP இல் 59,667 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
பிரான்சை விட்டு, 'RATP Dev' என 2002 ஆம் ஆண்டு ஒரு கிளை நிறுவனத்தை ஆரம்பித்து, உலகின் வேறு நாடுகளுக்கு சேவையை ஆரம்பித்தது.
அல்ஜீரியா, சீனா, இந்தியா, இத்தாலி, மொராக்கோ, பிலிப்பைன்ஸ், கத்தார், சவுதி அரேபியா, கிழக்கு ஆப்பிரிக்கா, கிழக்கு கொரியா, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்குகிறது இந்த RATP பெயருடன் பின்னால் ஒட்டிக்கொண்டுள்ள Dev எனும் பதம், Développement எனும் வார்த்தையைக் குறிக்கிறது.
சீனாவின் Hong Kong நகரில், ட்ராம் சேவையை இந்த நிறுவனம் வழங்குகிறது. பச்சை நிறத்திலான இந்த ட்ராம் சேவை இரண்டு அடுக்குகள் கொண்ட 'டாப் டக்கர்' ட்ராம் ஆகும்.
சில நாடுகளின் ட்ராம் சேவைகளையும், பல நாடுகளின் பேரூந்து சேவைகளையும், தொடரூந்து சேவைகளையும் வழங்குகிறது இந்த RATP.